SuperTopAds

இரணைதீவுக்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..! மக்களுடன் பேச்சு, சிங்கள கடும்போக்காளர்களை திருப்தி படுத்த அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
இரணைதீவுக்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..! மக்களுடன் பேச்சு, சிங்கள கடும்போக்காளர்களை திருப்தி படுத்த அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் இன்றைய தினம் இரணைதீவுக்கு நோில் விஜயம் செய்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் கலந்துரையாடியிருக்கின்றார். 

இன்று காலை 9.30 மணிக்கு இரணைமாதா நகரிலிருந்து இரணைதீவுக்கு படகு மூலம் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரைச்சி பிரதேசசபை தவிசாளர் மக்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார். 

இதன்போது கருத்து தொிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறுபான்மையினராக இருக்கின்ற இன்னொரு சமூகத்தினரை தண்டிக்கின்றோம் என்ற செய்தியை அவர்கள் சிங்களவர்களிற்கு கொடுக்க முயன்றார்கள். 

உடல்களை தகனம் மாத்திரம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் கைவிடப்பட்டதால் சிங்கள கடும்போக்கு தேசியவாதிகள் சீற்றமடைவதை தடுப்பதற்காகவும் உடல்கள் இரணைதீவிலேதான் அடக்கம் செய்யப்படும் என்ற திட்டத்தை 

அடுத்தடுத்த நாட்களில் அரசாங்கம் அறிவித்தது. நீங்கள் உங்கள் பூர்வீக நிலத்திற்கு திரும்பவேண்டும் என பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரனும் மற்றவர்களும் குரல்கொடுத்தது உங்களிற்கு தெரியும்.

பல பேரணைகளை கொண்டுவந்து உரையாற்றியது உங்களிற்கு தெரியும் ருவான் விஜயவர்த்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகயிருந்தவேளை இதனை சாத்தியப்படுத்துவதற்காக அவர் மூலம் பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.

சிறீதரன் அந்த முயற்சிகளில் இடைவிடாமல் ஈடுபட்டார் என்பது உங்களிற்கு தெரியும். எங்களுடைய முயற்சிகளிற்கு அப்பால் நாங்கள் எவ்வளவு முயற்சிகளை எடுத்திருந்தாலும் அது சாத்தியப்படாமலிருந்த நிலையில் நீங்களாகவே அதனை சாத்தியமாக்கினீர்கள்.

அது உங்களிற்கு உங்களுடைய துணிவிற்கு விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசு. அதனை நாங்கள் மனதார வரவேற்கின்றோம் ஏற்றுக்கொள்கின்றோம். எங்கள் மக்கள் எவ்வளவுதான் நசுக்கப்பட்டாலும் ஒடுக்கப்பட்டாலும் அவர்கள் பணிந்துவிடுவதில்லை. 

தொடர்ச்சியாக தங்களின் உரிமைககளிற்காக எழுந்து நிற்பார்கள் என்பதற்கு உங்களுடைய பிரயத்தனமும் வெற்றியும் ஒரு சான்றாக அமையும். நீங்கள் இங்கு வந்து குடியேறினாலும் கூட இங்கு வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது.

அப்படியில்லாமலிருக்கின்ற போதிலும் நீங்கள் உங்கள் நிலத்தை விட்டு அகலமாட்டீர்கள் இங்கேதான் இருப்பீர்கள் அது நிச்சயமானது என்பதும் எங்களிற்கு நன்றாக தெரியும். நாங்கள் இங்கேயிருக்கின்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 

எங்களால் முடிந்தளவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.ஆனால் ஒரு வருட காலத்திற்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலே ஏற்கனவே சிறிது சிறிதாக சகஜநிலைக்கு திரும்புகின்ற சூழ்நிலை கூட தற்போது மறுபக்கமாக திரும்பியிருக்கின்றது உங்களிற்கு தெரியும்.

ஆனாலும் இந்த கஸ்டமான காலத்திலும் கூட நாங்கள் எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை. நேற்றைய தினம் நானும் சிறிதரனும் கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்திக்கூட்டத்திலிருந்தபோது

 

சில ஊடகவியலாளர்கள் இங்கு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை கடற்படையினர் தடுத்த செய்தியை அறிந்து அந்த கூட்டத்திலேயே நாங்கள் அது குறித்து சுட்டிக்காட்டினோம். அதற்கு வெவ்வேறு சாக்குப்போக்குகளை சொன்னார்கள்.

அவ்வேளையில் நாளை நாங்கள் வருகின்றோம் என அவர்களிற்கு அறிவுறுத்தல் கொடுத்தோம்.நேற்றைய தினம் தடுக்கப்பட்டவர்களின் நடமாடும் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானித்தால் 

நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம். இங்கு வருவதற்கு முயன்ற ஒருவர் ருக்கி பெர்ணான்டோ  அவர் எங்களின் உரிமைகள் சார்பாக குரல்கொடுப்பவர் முஸ்லீம் மக்களின் உடல்களை எரிக்ககூடாது என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 

மனுக்களில் அவர் மனுதாரராகயிருந்தார். தங்கள் தங்கள் சமயநம்பிக்கைக்கு ஏற்ற விதமாக  அதனாலே சுகாதார கேடு எதுவும் இல்லை என தெரிந்த காரணத்தினாலேஇவிஞ்ஞானரீதியாக இந்த வைரஸ் நிலத்துக்கடியில் பரவாது என்பது தெரிந்திருந்ததால் 

188 நாடுகள் உடல்களை புதைப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தவேளைஇவேண்டுமென்று ஒரு இனவாத செயலாக இலங்கை அரசாங்கம் அதனை தடுத்திருந்தது.அதனை செய்வதற்கு என்ன காரணம் என நாங்கள் சிந்தித்தபோது 

கடும்போக்கு சிங்கள மக்களை சந்தோசப்படுத்துவதற்காக செய்த விடயமே தவிர அதற்கு விஞ்ஞான ரீதியிலான ஆதாரமோ அல்லது வேறு எந்த சாட்சியமோயிருக்கவில்லை. ஆனால் தற்போது அவர்களிற்கு ஒரு பிரச்சினை எழுந்திருக்கின்றது.

ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை நடந்துகொண்டிருக்கின்றதுஇதீர்மான வரைபொன்று முன்வைக்கப்பட்டுள்ளதுஇஅதிலே இந்த விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளதுஇ இதன் காரணமாக இலங்கைக்கு ஆதரவாக பேசுகின்ற பல முஸ்லீம் நாடுகள் 

தாங்கள் பிரேரணைக்கு வாக்களிக்காமல் விடக்கூடும் அல்லது எதிர்த்து வாக்களிக்ககூடும் என்ற நிலை எழுந்ததன் காரணமாகவே அவர்கள் உடல்களை புதைப்பதற்கான அனுமதியை இரவோடு இரவாக வழங்கினார்கள்.உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும். 

என பாராளுமன்றத்திலே பிரதமர் தெரிவித்த பின்னரும் பிரதமர் தெரிவித்தாலும் பரவாயில்லை எங்கள் நிபுணர்கள் குழு தெரிவித்தால் தான் முடிவெடுப்போம் என ஒரு இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே பிரதமரை அவமதித்திருந்தார்.

ஆனால் ஜெனீவா கூட்டத்தொடரிலே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்ற அன்று எத்தனை நாடுகள் இது குறித்து பேசின என்பதை நன்கு அவதானித்துஇஅன்றிரவே ஒரு வர்த்தமானி அறிவித்தல் 

மூலம் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்இ அங்கு நிபுணர்கள் எவரையும் கலந்தாலோசிக்கவில்லை. இவெறுமனே தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை மாற்றியமைத்தார்கள்.

ஆனால் மாற்றியமைத்தவர்கள் கடும் போக்கு சிங்கள தேசியவாதிகளை இன்னமும் சந்தோசப்படுத்துவதற்காகவே அவர்களை எந்த விதத்திலும் கோபமடையச்செய்யக்கூடாது என்பது இந்த அரசாங்கத்தின் பிரதான கொள்கை.

அவர்கள் எண்ணிக்கையில் சொற்ப அளவினர் ஆனால் அவர்கள் தான் இந்த அரசாங்கத்தின் மூல ஆதரவாளர்கள்.தங்களது அடிப்படையான ஆதரவாளர்களை சந்தோசப்படுத்துவற்காக உடல்கள் இரணைதீவிலேதான் அடக்கம் செய்யப்படும் என்ற திட்டத்தை 

அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் அறிவித்தார்கள். அப்படிச்சொல்வதன் மூலம் எண்ணிக்கையிலே சிறுபான்மையினராக இருக்கின்ற இன்னொரு சமூகத்தினரை தண்டிக்கின்றோம் என்ற செய்தியை 

அவர்கள் சிங்களவர்களிற்கு கொடுக்க முயன்றார்கள்.அந்தவேளையில் தான் நாங்கள் நிதானமாக செயற்படவேண்டியிருந்தது என்றார்.