கவினுக்காக ஒன்று இணைந்த 6 இயக்குனர்கள்!!

ஆசிரியர் - Editor II
கவினுக்காக ஒன்று இணைந்த 6 இயக்குனர்கள்!!

விஜய் ரீவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்காக தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் 6 பேர் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

கவின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து விஜய் ரீவி நடத்தும் பிக்பாஸ் 3 சீசனில் பங்கு கொண்டு அவர் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் வினீத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த படத்தின் மோசன் போஸ்டரை தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களான லோகேஸ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஸ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு