புளியம்பொக்கணை உற்சவத்தில் பக்தர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!
புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தி முடிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்றுநடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து குறித்த மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மாத்திரமே இந்த பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் என்பவற்றை பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர், கோவில் நிர்வாகம் சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .