பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 ஆவது பாகம் தயார்!! -மே மாதம் உலகம் முழுவதும் வெளியீடு-

ஆசிரியர் - Editor II
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 ஆவது பாகம் தயார்!! -மே மாதம் உலகம் முழுவதும் வெளியீடு-

உலக சினிமாவில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் 8 பாகங்களும் ரசிகர்களிடையே தனி மவுசு பெற்றவையாக காணப்படுகிறது.

இந்த படங்களில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ், டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இதில் நடித்த பால் வாக்கர் 7 ஆவது பாகம் உருவாகும் போது கார் விபத்தில் உயிரிழந்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை.

இந்நிலையில், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் 9 ஆம் பாகம் வருகிற ஜூன் மாதம் 25 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இப்படத்தை கடந்தாண்டு மே மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படாததால், படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு