யாழ்ப்பாணம் புத்தூர் மடிகே பஞ்சசீஹ வீத்தியாலய மாணவர்களுக்கு உதவிகள்

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணம் புத்தூர் மடிகே பஞ்சசீஹ வீத்தியாலய மாணவர்களுக்கு உதவிகள்

யாழ்ப்பாணம் புத்தூர் மடிகே பஞ்சசீஹ வீத்தியாலயத்திற்கு பாடசாலையின் ஸ்தாபகர் வண மடிகே பஞ்ஞாசீக தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட தர்ம விஜய பவுண்டேசன் அமைப்பின் நன்கொடையாளர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த திரு அல்பிரச் ஃபடர் என்பவரால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பான்ட் வாத்தியம், பான்ட் சீருடை, ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டதுடன் 2017 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் மூன்று இடங்களில் சித்தியடைந்த இ.லக்ஷனா, ஜெ.கிஷானி, யோ.திஷானி மூன்று மாணவிகளுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று(20) காலை 9 மணிக்கு யாழ். இராணுவ தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் பாடசாலையில் இடம்பெற்றது .

இதில் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.கணேசானந்தன், உதவி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சற்குணராயா, யாழ்ப்பாணம் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சி , 51 ஆவது படைத்தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன, 521 படைப்பரிவு தளபதி சுயீவ ஹெட்டியாராச்சி, 52 ஆவது படைத்தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வருகே, தர்ம விஜய அமைப்பின் தலைவர் அஜித் அல்வத்த ஆகியோர் கலந்துகொண்டதுடன் மாணவர்களுக்கு பான்ட் வாத்தியம், சீருடைகள், துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைத்ததுடன் கல்லூரி அதிபர், ஆசிரியரிடம் ஒலிபெருக்கி கருவிகள், மின்விசிறிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் யாழ்.நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரர் , சமாதான அமைப்பின் தலைவர் லக்ஸ்மன் மகாநாம உட்பட அனைத்து கல்விசார் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்குகொண்டிருந்தனர்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு