அழகை கூட்டுவதற்கு கஸ்ரப்படும் அஞ்சலி!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள ஆகிய 4 மொழிகளில் 5 படங்களில் நடித்து வருகின்றார்.
தொடர்ச்சியான படப்பிடிப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:-
நான் முதலில் பருமனாக இருந்தேன். ஆனால் இப்போது உடல் மெலிந்து இருக்கிறேன். எனது மெலிந்த தோற்றத்தை பார்த்து பலரும் அழகியாக மாறிவிட்டதாக கூறுகின்றார்கள். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்றும் கேட்கின்றனர்.
முதலில் தமிழ் படங்களில் குடிசை பகுதிகளில் இருக்கிற சாதாரண பெண் போன்ற கதாபாத்திரங்களில்தான் நடித்தேன். அதற்கேற்ற உடல் தோற்றம் எனக்கு இருந்தது.
ஆனால் தற்போதைய படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்தபோது உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் கஸ்டப்பட்டு எடையை குறைத்தேன் என்றார்.