யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து அனுப்பபட்ட பொதிக்கு உரிமைகோரி சாரதி, நடத்துனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..!
யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து அனுப்பபட்ட பொதிக்கு உரிமைகோரிய பெண் ஒருவர் ரவுடிகளை பயன்படுத்தி பேருந்து நடத்துனர் மற்றும் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ரவுடி கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது நேற்றுமுன்தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார். வவுனியாவில் குறித்த நடத்துனர்
உரிய நபரிடம் தொலைபேசியினை வழங்கிய பின்னர் மற்றுமொரு பெண் பழைய பஸ் நிலையத்திற்கு சென்று நடத்துனரிடம் தொலைபேசியினை கேட்டபோது தொலைபேசியினை அவர் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதன்போது அப்பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். காயமடைந்த நடத்துனர் , சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து தாக்குதல் நடத்திய நபர்கள் தொடர்பில் சி.சி.டிவியின் உதவியுடன் வவுனியா பொலிஸார் நேற்று மாலை 43வயது மதிக்கத்தக்க தேக்கவத்தையில் வசிக்கும் ஒருவரை கைது செய்ததுடன்
அவரது முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தார்கள். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.