கொழும்பு மற்றும் வெலிக்கந்த பகுதிகளில் இருந்து இரணைதீவுக்கு சடலங்கள் கொண்டுவரப்படும்..! அது தற்காலிகமானது என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
கொழும்பு மற்றும் வெலிக்கந்த பகுதிகளில் இருந்து இரணைதீவுக்கு சடலங்கள் கொண்டுவரப்படும்..! அது தற்காலிகமானது என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர்..

கொவிட் -19 தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் தற்காலிகமானது. என கூறியிருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநி அசேல குணவர்த்தன, 

மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழு இந்த விடயம் குறித்து ஆராய்வதாக குறிப்பிட்டார்.

அவர்கள் அந்தந்த மாகாணங்களிலிருந்து கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை அடக்கம் செய்யப் பொருத்தமான இடத்தை தீர்மானிக்கும் வரை இந்த முடிவு தற்காலிகமாக இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அடக்கம் செய்வதற்கான அனைத்து செலவுகளும் 

அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் சடலங்கள் கொழும்பு மற்றும் வெலிகந்த மருத்துவமனை போன்ற இரு இடங்களிலிருந்து தீவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு உறவினர்கள் 

இறுதி சடங்குகளுக்கு தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இறுதி சடங்குகள் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு