சுவிஸில் நடந்த ஓவியப் போட்டி!! -தமிழின அழிப்பை பிரதிபலித்த ஈழத்தமிழ் சிறுமிக்கு முதலிடம்-

ஆசிரியர் - Editor II
சுவிஸில் நடந்த ஓவியப் போட்டி!! -தமிழின அழிப்பை பிரதிபலித்த ஈழத்தமிழ் சிறுமிக்கு முதலிடம்-

சுவிட்சர்லாந்தில் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் முதலிடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதிலிடம் பெற்ற சிறுமிக்கு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர். 


இது தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி தனது 19 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது.

இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் கடந்த 19 ஆம் திகதி நடத்தப்பட்ட இவ் ஓவியப் போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.

இதில் ஒருவராக ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு என்ற புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ்ச் சிறுமியும் பங்கேற்று ஓவியத்தை வரைந்திருந்தார்.

அவர் ஈழத்தில் தமிழினம் மீது இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்பட்ட அழிப்பு நடவடிக்கையை பிரதிபலிக்கும் வகையில் ஓவியத்தை வரைந்துள்ளார். 

குறிப்பாக குருந்தூர்மலையில் ஆதிகாலம் முதல் இருந்த ஆதிசிவனை அப்புறப்படுத்திவிட்டு புத்தர் சிலையை நிறுவியுள்ள காட்சியை தத்ரூபமாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் நடத்தும் நீதிகோரிய போராட்டத்தை வெளிப்படுத்தியும், போரின் இறுதிக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்வது உள்ளிட்ட தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் காட்சி, போரின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சி என ஈழத் தமிழினம் சந்தித்த, சந்தித்து வரும் அடக்குமுறைகளையும், அழித்தொழிப்புகளையும் உயிரோட்டமாக தனது ஓவியத்தில் கொண்டு வந்திருந்தார்.

ஆயிரம் போட்டியாளர்களின் ஓவியங்களுக்கு மத்தியில் அபிர்சனா வரைந்த  ஓவியம் முதலாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு