122 மில்லியன் ரூபாய் செலவில் அமைத்த பேருந்து நிலையதில் மாடு கட்டுவதா..? வியாழன் வரை அவகாசம், அதன் பின்னர் மேல் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
122 மில்லியன் ரூபாய் செலவில் அமைத்த பேருந்து நிலையதில் மாடு கட்டுவதா..? வியாழன் வரை அவகாசம், அதன் பின்னர் மேல் நடவடிக்கை..

யாழ்.நகரில் கட்டப்பட்டுள்ள நெடுந்துார பயணிகள் பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதற்கு இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவையினர் மறுத்துவரும் நிலையில் தங்கள் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதற்கு எதிர்வரும் வியாழக்கிமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதற்கு இன்றைய தினம் இ.போ.சபை மறுத்திருந்த நிலையில் யாழ்.மாநகரசபையில் இன்று மாலை இ.போ.சபையினர் தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொலிஸார் மற்றும் மாநகர முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. 

இது குறித்து முதல்வருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று நாமும், பொலிஸாரும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் இணைந்து பேசியிருக்கின்றோம். இதன்போது தங்கள் முடிவை அறிவிப்பதற்காக இ.போ.சபையினர் எதிர்வரும் வியாழக்கிமை வரையில் அவகாசம் கேட்டுள்ளனர். 

இதேபோல் மாகாணத்திற்கு வெளியே சேவையில் ஈடுபடும் பேருந்துகள் குறித்து நாளையே தமது முடிவினை கூறுவதாக உத்தரவாதம் வழங்கியிருக்கின்றனர். இதேவேளை சுமார் 122 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் மாடு கட்ட முடியாது. இடிக்கவும்  முடியாது. 

மேலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு முன்னர் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்து பேசி இணக்கப்பாடு கண்டிருந்தனர். இப்போது நாங்கள் வரமாட்டோம் என்கிறவர்கள் முன்பே இதனை எதிர்த்திருக்கவேண்டும். அல்லது ஆட்சேபித்திருக்கவேண்டும்.

அதனை செய்யாமல் தங்களுக்குள் உள்ள பிரச்சினையை அடிப்படையாக வைத்துக் கொண்டு சாதிக்க முடியாது. அதனை இன்றைய கலந்துரையாடலில் தெளிவாக கூறியுள்ளோம். இன்னும் தெளிவாக கூறுவதானால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதை தவிர வேறு வழியே இல்லை. 

ஆகவே எதிர்வரும் வியாழன் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில் தனியார் பேருந்து சேவையினையும் பழைய இடத்திலிருந்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் வியாழக்கிமைக்கு பின்னர் அடுத்தகட்டம் தொடர்பாக ஆராய்வோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு