நிர்வாணமாக நடித்த அமலாபால்!! -விவாகரத்தின் பின் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் மனம் திறந்துள்ளார்-
விவாகரத்து செய்த பின்னர் தனக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகள் தொடர்பில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் மனம் திறந்து பேசியுள்ளார்.
அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து 2016 இல் திருமணம் செய்து கொண்டனர். பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் அமலாபால். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அமலாபால்:- நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை. எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர்.
இதனால் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை தொடர்பிலோ எவரும் கவலைப்படவில்லை என்றார்.