தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எம்ய்ஸ் வைத்தியசாலையில் இன்று தானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது:- எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் வைத்தியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.