SuperTopAds

1982 ஆண்டில் நடந்த விபத்தால் விபரீதம்!! -நடிகர் அமிதாப்பச்சனுக்கு அறுவைச்சிகிச்சை-

ஆசிரியர் - Editor II
1982 ஆண்டில் நடந்த விபத்தால் விபரீதம்!! -நடிகர் அமிதாப்பச்சனுக்கு அறுவைச்சிகிச்சை-

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் 78 வயதான அமிதாப்பச்சன், தனக்கு அறுவைச் சிகிச்சை நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

1982 ஆம் ஆண்டு கூலி திரைப்படத்தின் படப்பிடிப் பின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால் அவருடய உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் எனது உள் உறுப்புகள் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகின்றன என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் திடீரென அவரை கொரோனா தொற்று தாக்கியது. மும்பை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு பின் அவர் உயிர்பிழைத்தார்.

ஆனால் இப்போது திடீரென அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. இதுபற்றிய தகவலை அமிதாப்பச்சனே அவருடை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.