சிம்புவுடன் இணைந்தவர் கர்ப்பமானார்!!

ஆசிரியர் - Editor II
சிம்புவுடன் இணைந்தவர் கர்ப்பமானார்!!

தமிழில் சிம்பு, தனுஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்த நடித்த நடிகை ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாயகியாக அறிமுகமான ரிச்சா கங்கோபாத்யாய் சில படங்களில் நடித்த பின்பு அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார். மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தவர் அவர்.

நடிகை ரிச்சா, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வரும் ரிச்சா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜூன் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு