வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து தமிழரசு மத்திய குழுவில் காரசாரம்..! சிறீதரனின் தொிவு கூறித்து கட்சிசார்ந்தோரே விமர்சனம்..

ஆசிரியர் - Editor I
வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து தமிழரசு மத்திய குழுவில் காரசாரம்..! சிறீதரனின் தொிவு கூறித்து கட்சிசார்ந்தோரே விமர்சனம்..

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சோ சேனாதிராஜாவையும், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனையும் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரோித்திருக்கின்றார். 

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றய தினம் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி நபர்களை வேட்பாளர்களாக பிரோித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும் எனவும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. 

அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும். அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரோித்துள்ளார். 

இந்த தீர்மானம் மத்திய குழுவில் ஏற்கப்பட்டுள்ளபோதும், சமூக வலைத்தளங்களில் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பிரோிப்பு குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்ந்தவர்களே

முன்வைத்திருப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது. 

Radio