ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் விரைந்த விஜய் சேதுபதி!!

ஆசிரியர் - Editor II
ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் விரைந்த விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவதாக உள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு வெளிவந்து பிசாசு படம் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஸ்கினே இயக்குகிறார். 

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் சில காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்காக திண்டுக்கல்லுக்குச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.


Radio