காணி உரிமையாளரை அச்சுறுத்த மயானத்திலிருந்து மனித தலையை எடுத்துவந்து காணிக்குள் வீசிய 3 பேர் கைது..!

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் காணி ஒன்றினுள் மனித தலை வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து திருகி எடுக்கப்பட்டடதாக பொலிஸாரின் முதலகட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
தலை வீசப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரை பயமுறுத்தவே மனிதத் தலையை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து திருகி எடுத்து வீசியதாக
சந்தேக நபர் ஒத்துக் கொண்டுள்ளனர்.