தயாராகும் ஸ்பைடர்மேன் 3 ஆம் பாகம்!! -கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட முடிவு-

ஆசிரியர் - Editor II
தயாராகும் ஸ்பைடர்மேன் 3 ஆம் பாகம்!! -கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட முடிவு-

உலகம் முழுவதிலும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஹாலிவுட் படமான ஸ்பைடர் மானின் 3 ஆம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது.

இப்படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமி ஆகியோர் 3 ஆம் பாகத்தில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப் ஆகியோர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஸ்பைடர்மேன் போன் ஹோம், ஸ்பைடர்மேன் ஹோம் ரெக்கர், ஸ்பைடர்மேன் ஹோம் ஸ்லைஸ் ஆகிய 3 பெயர்களையும் பகிர்ந்தனர். 

இதனால் ஒரு படத்துக்கு மூன்று தலைப்புகளா என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஸ்பைடர் மேன் 3 என்ற ஹேஸ்டேக்கும் உலக அளவில் டிரெண்டிங் ஆனது.

இந்த நிலையில் ஸ்பைடர்மேன் 3 ஆம் பாகம் படத்துக்கு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் என்றும் நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு