யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் திடீரென வானத்தில் அடிக்கப்பட்ட பரா லைட்..! துருவி துருவி விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் திடீரென வானத்தில் அடிக்கப்பட்ட பரா லைட்..! துருவி துருவி விசாரணைகள் ஆரம்பம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் கடற்கரையில் நேற்றிரவு திடீரென பரா லைட் அடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

வத்திராயன் கடற் கரையை அண்டிய பற்றைக்காடு உள்ள ஒரு பிரதேசத்தில் 8 மணியளவில் பரா லைட் வானத்தில் ஏவப்பட்டிருக்கின்றது. 

இது எதற்காக ஏவப்பட்டது? என தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடத்தல் படகுகளிற்கு வழி காட்டப்பட்டதா என்ற கோணத்தில் 

உடனடியாக தீவிர தேடுதல் இடம்பெற்றுள்ளது. இதேநேரம் போர் காலத்தில் கைவிடப்பட்ட பரா வெளிச்சக்குண்டாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராயப்பட்டபோது

ஏவப்பட்ட குண்டு புதிதாக இருப்பதனால் சந்தேகம் கொண்டு தேடுதல் இடம்பெற்றது. இருந்தபோதும் பரா வெளிச்சக் குண்டை ஏவியவர்கள் 

தொடர்பிலோ அல்லது சந்தேகத்தின் பெயரில் எவரும் கைது செய்யப்பட்டாதபோதும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு