பாலிவுட்டில் களமிறங்கும் விஜய் சேதுபதி!! -ஜேடி சேரும் கத்தீனா கைப்-

ஆசிரியர் - Editor II
பாலிவுட்டில் களமிறங்கும் விஜய் சேதுபதி!! -ஜேடி சேரும் கத்தீனா கைப்-

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் புதிக பாலிவுட் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான ஸ்ரீராம் ராகவன், அடுத்ததாக இயக்கும் புதிய இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளார்.

அந்த படத்திற்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது திரில்லர் படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புனேவில் ஆரம்பமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு