ஏழை மாணவிகள் வைத்தியத் துறையில் கல்வியை தொடர பண உதவி!! -ஹரிஸ் கல்யாணின் மனிதாவிமான செயல்-
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஸ் கல்யாண், அரச பாடசாலைகளில் படிக்கும் மூன்று ஏழை மாணவிகள் வைத்தியத் துறையில் தமது கல்வியை தொடர்வதற்கு உதவியுள்ளார்.
வைத்தியத் துறை கல்வியை தொடர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தின் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரச பாடசாலை மாணவர்களுக்கு 7.5 வீத இட ஒதுக்கீட்டில் வைத்தியத் துறையில் கல்வி கற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தேர்வான மூன்று மாணவிகளுக்கு நடிகர் ஹரிஸ் கல்யாண் பண உதவி செய்துள்ளார்.