ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம்!! -ஜெயின் பிறந்த நாள் நினைவாக எடப்பாடி திறந்து வைத்தார்-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளான இன்று அறிவுசார் பூங்காவையும்இ அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.
மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது. இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்கா ஒரு புறமும்இ மற்றொரு புறம் டிஜிட்டல் அருங்காட்சியகமும் 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அருங்காட்சியம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஜெயலலிதாவிடம் பாடசாலை மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.