13 ஆண்டுகளின் பின் படம் இயக்கும் திருமுருகன்!! -வடிவேலுவை மீண்டும் நடிக்க வைக்க திட்டம்-

ஆசிரியர் - Editor II
13 ஆண்டுகளின் பின் படம் இயக்கும் திருமுருகன்!! -வடிவேலுவை மீண்டும் நடிக்க வைக்க திட்டம்-

13 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ள பிரபல இயக்குனர் திருமுருகன், அப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன் பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். 

அடுத்ததாக அவர் பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தை 2008 ஆம் ஆண்டு இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார்.

இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திருமுருகன் இயக்கிய இரண்டு படங்களிலும் வடிவேலுவின் நகைச்சுவை பெரிதும் வரவேற்பை பெற்றது.

இதனால் தற்போது இயக்க உள்ள புதிய படத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். 

Radio