கல்குவாரியில் திடீரென நடந்த பயங்கர வெடிவிபத்து!! -5 பேர் பரிதாப உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor II
கல்குவாரியில் திடீரென நடந்த பயங்கர வெடிவிபத்து!! -5 பேர் பரிதாப உயிரிழப்பு-

கர்நாடக மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 5 பேர் பரிதாபமான உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று திங்கட்கிழமை இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 


Radio