என்னை கவர்ந்த காதல் கடிதம்!! -கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்த நடிகை ராசி கண்ணா-

ஆசிரியர் - Editor II
என்னை கவர்ந்த காதல் கடிதம்!! -கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்த நடிகை ராசி கண்ணா-

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராசிகண்ணா, தனக்கு வந்த காதல் கடிதங்கள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ராசி கண்ணா தனக்கு வந்த காதல் கடித தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு சீனியர் மாணவர் என்னை காதலித்தான். காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் எப்படியோ தப்பித்து விடுவேன். ஆனாலும் ஒருநாள் பின் தொடர்ந்து வந்து துணிவுடன் எனது கையில் கடிதத்தை திணித்து விட்டுபோய் விட்டான். அந்த கடிதத்துடன் ஒரு பூவும் கொடுத்தான். 

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அவனை பிடிக்கவில்லை. ஆனால் அவன் தந்த கடிதத்தில் என்னை வர்ணித்து எழுதி இருந்ததை படித்ததும் சந்தோசமாக இருந்தது. அந்த கடிதத்தை வீட்டுக்கு கொண்டு போய் அம்மாவிடம் காட்டினேன். அவரும் இந்த அளவுக்கு உன்னை யாரும் வர்ணித்து இருக்க மாட்டார்கள். 

இத்தனை அழகாக இருக்குறியே. நாங்கள் கூட கவனிக்கவில்லையே. அவனை பிடித்து இருந்தால் சொல்லு என்றார் அம்மா. எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்றேன். அதன்பிறகு அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்றார்.


Radio