சொந்தமாக படம் தயாரிக்கிறேன்!! -நடிக்க வருமாறு வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்-

ஆசிரியர் - Editor II
சொந்தமாக படம் தயாரிக்கிறேன்!! -நடிக்க வருமாறு வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்-

சொந்தமாக படம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ள நடிகை மீரா மிதுன், அதில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிகர் வடிவேலுவை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால் பட வாய்ப்புக்களை இழந்துள்ள வடிவேலு அண்மையில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, தனக்கு படவாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என்று கூறி கண்கலங்கியிருந்தார். 

அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். 

உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. அதிகமானவர்கள் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன் என்றுள்ளார்.


Radio