கொரோனா தொற்றினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்!! -புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
கொரோனா தொற்றினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்!! -புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாபவர்களின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிர் இருந்து முழுமையாக குணம் அடைந்தாலும் அவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் கொரோனா தொற்றின் பின்விளைவுகள் தொடர்பில் மிகப் பெரிய ஆய்வை இந்தியயாவின் ஐதராபாத், நாக்பூர், பெங்களூர், பாட்னா, சண்டிகரில் உள்ள விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து நடத்தினார்கள். 

அதில் கொரோனா பாதித்தால், அவர்களது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மிக சிறிய உடல் உறுப்புகளையும் வைரஸ் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Radio