இயக்குனரின் கட்டுப்பாட்டில் 2 மாதங்களாக நடிகை ராஸ்மிகா!!

ஆசிரியர் - Editor II
இயக்குனரின் கட்டுப்பாட்டில் 2 மாதங்களாக நடிகை ராஸ்மிகா!!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட வேவ்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ராஸ்மிகா, பிரபல பாலிவுட் இயக்குனரிடம் நடிப்பு பயிற்சி பெற்றுவருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஸ்மிகா, அடுத்ததாக இந்தியில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் ‘மிசன் மஜ்னு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

இந்த படம் இந்திய இராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்டு உருவாகின்றது. இதில் நடிக்க நடிகை ராஸ்மிகாவுக்கு, படத்தின் இயக்குனர் சாந்தனு நடிப்பு பயிற்சி கொடுத்து வருகிறாராம். இந்த நடிப்பு பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.


Radio