யாழில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது விழா

ஆசிரியர் - Admin
யாழில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது விழா

யாழ். மாவட்ட இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா நேற்றுச் சனிக்கிழமை(17) காலை-09 மணி முதல் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் இடம்பெற்ற குறித்த விழாவில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதன் போது தேசிய ரீதியில் இடம்பெற்ற இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகள் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன் மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடனம், குழுநடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த விழாவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு