தமிழக சட்டசபை தேர்தல்!! -பாதுகாப்புக்கு ஒரு இலட்சம் பொலிஸார்-

ஆசிரியர் - Editor II
தமிழக சட்டசபை தேர்தல்!! -பாதுகாப்புக்கு ஒரு இலட்சம் பொலிஸார்-

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அம்மாதத்தின் வாரம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமிழக தேர்தல் ஆணையம் கொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் நின்று வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மேலும் மாநிலம் முழுவதும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ள நிலையில் குறித்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள ஒரு இலட்சம் பொலிஸாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கிடையில் எதிர்வரும் 25 ஆம் திகதி அங்கு துணை ராணுவப் படைகளும் வரவழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.