கொரோனாவில் இருந்து தப்பிய சூர்யா!!
நடிகர் சூர்யா சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதன் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய அவர் தன்னை தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையை தொடர்ந்தார். இதனால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற போது அவரால் இதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
சூர்யா இல்லாமலேயே பிற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினர். இந்த நிலையில் சூர்யாவுக்கு தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், அன்பான ரசிகர்களுக்கு, சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்துள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.