தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்!! -சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்பட 42 வழங்கிவைப்பு-
தமிழ் திரையுலகின் நடிகர்களான சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஸ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக இவ்விருது நடிகர்களான ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கும், நடிகைகளான சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஸ், தேவதர்சினி, மதுமிதா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இசையமைப்பாளர்களான டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்களான சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஸ் ஆகியோருக்கும், இயக்குணர்களான கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் வழங்கப்பட உள்ளது.
மேலும் சீரியல் நடிகர்களான நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியா ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஸ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.