தமிழ் கட்சிகள் மீதான அதிருப்தியே புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியது..!

ஆசிரியர் - Editor I
தமிழ் கட்சிகள் மீதான அதிருப்தியே புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியது..!

தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாகவே தமிழ் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக தொழிலதிபர் ஜெயந்திரன் கூறியுள்ளார். 

“அகில இலங்கை தமிழ் மக்கள் எழுச்சி கட்சி” என்ற கட்சியை அங்குரார்ப்பணம் செய்து யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் தற்போதைய தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் சரியான பாதையை காட்டாத நிலையில் மக்களின் பிரச்சினைகளும், தேவைகளும் வேறு விதமாக செல்கிறது. 

இந்நிலையில் நாம் உருவாக்கியிருக்கும் அரசியல் கட்சியானது இனம், மதம், மொழி கடந்து எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்படுவதை இலக்காக கொண்டிருக்கின்றது. எனது அரசியல் கட்சியின் எதிர்கால அரசியல் குறித்தும் கட்சியின் பதவி நிலைகள் குறித்தும், 

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் உறுதியாக வெளிப்படுத்தப்படும். எனவே புதிய நோக்கோடு எமது அரசியல் பயணத்தை விரும்பும் எவரும் எம்மோடு இணைந்து பயணிக்கலாம். என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு