கால்வாய்க்குள் பாய்ந்த பயணிகள் பேருந்து!! -உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு-
மத்திய பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த பேருந்து சித்தி மாவட்டத்தில் இருந்து சத்னா நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
வழமையான போக்குவரத்து பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பேருந்தின் சாரதி மாற்று பாதையை பயன்படுத்தியதாகவும் இதன்போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வரை நடைபெற்ற மீட்பு பணிகளில் 42 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் மேலும் 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கால்வாயில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 7 பேர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.