SuperTopAds

மக்கள் நடமாட்டம் அதிகமான வீதியில் வியாபாரியை அச்சுறுத்தி 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழிப்பறி..!

ஆசிரியர் - Editor I

நெல் கொள்வனவுக்கு சென்றவரை வழிமறித்த கொள்ளை கும்பல் சுமார் 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

நெல் கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப் பணத்துடன் நபரொருவர் சென்றிருந்ததாகவும், இதன்போது குறித்த நபரை 

புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் வைத்து இனந்தெரியாத குழுவினர் அச்சுறுத்தி 9 இலட்சத்து 75,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் 

முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.