நான் தற்கொலை செய்தார் அவர்களை பிடித்து தூக்கில் போடுங்கள்!! -நடிகை மீரா மிதுன் பரபரப்பு தகவல்-
மன அழுத்தத்தினால் இப்போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருவதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
எனக்கு மன அழுத்தம் உள்ளது. தற்கொலை எண்ணமும் வருகிறது. இதை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இருப்பினும் என்னை தொந்தரவு செய்வது நிறுத்தப்படவில்லை.
எனக்கு மன நலம் பாதித்து வருகிறது. நான் இறந்தால் அதற்கு காரணமான அனைவரையும் தூக்கில் போடவேண்டும் என்றார்.