SuperTopAds

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு திருமணம்!! -சீர்வரிசைப் பொருட்களும் வழங்கிவைப்பு-

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு திருமணம்!! -சீர்வரிசைப் பொருட்களும் வழங்கிவைப்பு-

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைக்கின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.

அதன்படி கோவை சிறுவாணி ரோடு பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் 123 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சூட்கேஸ், கியாஸ் ஸ்டவ், சில்வர் குடம், குக்கர் உள்பட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.