பூநகரி - கௌதாரிமுனை பகுதிக்குள் நுழைய 3 நிறுவனங்களுக்கு நீதிமன்றம் தடை..! மக்கள் போராட்டத்தின் விளைவு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கௌதாரிமுனை பகுதிக்குள் நுழைய 3 நிறுவனங்களுக்கு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கௌதாரி முனையில் 3 நிறுவனங்கள் மணல் அகல்வில் ஈடுபட்டமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதனையடுத்து பூநகரிப் பொலிஸார் 2019ஆம் ஆண்டு 

அப் பகுதியில் மணல் அகழ்ந்த நிறுவனங்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பூநகரி பகுதி மக்கள் சார்பில் சட்டத்தரணிகளான சுப்பிரமணியம்- சிவசூரியா, ராசமகேந்மிரன் - தர்சா, 

சு.லக்சிகா, ந.பிருந்தா , சௌ.சர்மியா ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அனுமதி மட்டும் பெற்றுள்ளது. அதிலும் மனித வலு மூலம் மட்டுமே அகழ முடியும் எனவும், 

பனை வளம் அழிக்க முடியாது எனவும் , பிரதேச செயலகம், பிரதேச சபை அனுமதிகள் என அனைத்தும் பெறப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருந்த போதும் உள்ளாராட்சி சட்டத்தை மீறி இவற்றினை பெறாதமை மட்டுமன்றி 

அனுமதி வழங்கிய நிறுவனத்தின் நிபந்தனைகளும் கடைப்பிடிக்கவில்லை. என சட்டத்தரணிகள் சுட்டிக் காட்டியிருந்தனர். இவற்றிற்கமைய குறித்த 3 நிறுவனங்களும் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகல்வதனால் 

அப் பகுதிக்குள் நுழையத் தடை விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா 12ம் திகதி தீர்ப்பளித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு