SuperTopAds

திருமண ஆசை காட்டி இளம்பெண் பாலியல் பாலியல் பலாத்காரம்!! -இளைஞரை மடக்கிப்பிடித்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II

இந்தியாவின் புதுவை அருகே திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுவை முத்திரையர்பாளையம் காந்தி வீதியில் வசிக்கும் 25 வயதான அல்போன்ஸ் என்ற இளைஞருக்கு 19 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. 

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அந்த பெண்ணை குறித்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் அந்த பெண்ணுடனான தொடர்பை விட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த அந்த பெண், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கெஞ்சினார். ஆனால் திருமணம் செய்ய முடியாது என்று அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த இளம்பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கோட்டக்குப்பம் மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.