காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால்!! -வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படும்: -பிரியங்கா உறுதி-

ஆசிரியர் - Editor II
காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால்!! -வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படும்: -பிரியங்கா உறுதி-

காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றினால் சர்சையை ஏற்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உ.பி. மாநிலத்தில் இடம்பெற்ற விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமது வாழ்வுரிமைக்காக போராடி வரும் விவசாயிகளுக்கு,  பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர்களும் அவமரியாதை செய்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்துவது ஏன் என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை. போராட்டம் நடத்தும் விவசாயிகளை தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் மத்திய அரசு தான் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால் புதிய வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படும் என்றார்.