SuperTopAds

கீர்த்தி சுரேசுடன் அனிருத் காதலா? -வெளியானது இருவரும் கட்டித்தளுவும் படங்கள்-

ஆசிரியர் - Editor II

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஸ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார். 

தற்போது அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள். 

ஆனால், இதனை கீர்த்தி சுரேஸ் மற்றும் அனிருத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள்.