SuperTopAds

சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் அரசுடைமை!! -மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை-

ஆசிரியர் - Editor II
சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் அரசுடைமை!! -மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை-

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் திருவாரூரில் உள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா அதிரடி அறிவிப்பினை விடுத்துள்ளார். 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகியுள்ளனர். இதனிடையே ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 7 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவித்துள்ளார்.