ஊரடங்கை பயன்படுத்தி ஆபாச படங்கள் தயாரிப்பு!! -87 படங்களை தயாரித்த நடிகை கைது-
மும்பையில் கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு வேளைகளில் 87 ஆபாச படங்களை தயாரித்த மாடல் அழகியும் நடிகையுமான கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டார்.
நடிகை கெஹானா வசிஸ்த் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஆபாச வீடியோக்களை தயாரித்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் துணை நடிகைகளிடம் கெஹனா நைசாகி பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார்.
இதற்காக அவர்களுக்கு படம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரை சம்பளம் கொடுத்துள்ளார். 87 ஆபாச வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்க்க 2 ஆயிரம் ரூபா கட்டணம் வசூலித்துள்ளார்.