7 வயதான பாடசாலை சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்..!
7 வயதான சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றான். குறித்த சம்பவம் ஓமந்தை - நவ்வி பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு படிக்கச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த சிறுவனின் புத்தகபை குறித்த சிறுவனின் சக மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன்
அவ்வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய
ப.அபிசாந் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.