சசிகலா தலைமையில் மாபெரும் பேரணி!! -சென்னையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை நடத்த திட்டம்-
சென்னையில் சசிகலா தலைமையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த அனுமதி கோரி அங்குள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது,
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் திகதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறு தினம் செவ்வாய்க்கிழமை அவர் சென்னை செல்ல உள்ளார்.
அங்கு வரவுள்ள சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில்,
சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்கும் பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை பொலிஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்றும், ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறப்படுகிறது.