ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்!! -விழுப்புரத்தில் அமைக்க சட்டப்பேரவையில் பிரேரணை தாக்கல்-
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு இன்று வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் பிரேரணை தாக்கல் செய்யப்படுகிறது.
திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து தனியாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் வகையில், ஜெயலலிதா பெயரில் தனியாக பல்கலைக் கழகம் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ளது.