SuperTopAds

தண்ணீர் என நினைத்து சானிட்டைசரைக் குடித்த ஆணையர்!! -கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது நகைப்பு சம்பவம்-

ஆசிரியர் - Editor II

மும்பை மாநகராட்சியில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது உதவி ஆணையர் தண்ணீர் என நினைத்து சானிட்டைசரைக் குடித்த சம்பவம் அரங்கேறியது.

மும்பை மாநகராட்சியில் அடுத்த நிதியாண்டுக்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரவு செலவுத் திட்டம் ஆணையர் இக்பால் சிங் சகல் தாக்கல் செய்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது உதவி ஆணையர் ரமேஸ் பவார் தனக்கு முன் இருந்த போத்தலை எடுத்துத் தண்ணீர் என நினைத்துக் குடித்தார். அது சானிட்டைசர் எனத் தெரியவந்ததும் பின்னர் அதை வெளியே துப்பினார். இச் சம்பவம் அங்கிருந்தவர்களை நகைப்புக்குள்ளாக்கியுள்ளது.