ஷகீப் ஹசன் மற்றும் நூருல் ஹசனுக்கு அபராதம்
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (16) நடைபெற்ற போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.
போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் தொடர்பில் ஷகீப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகிய இருவருக்கும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இப்போட்டியில் வழங்கப்படும் கொடுப்பனவில் இருந்து 25% ஐ அபராதமாக விதித்துள்ளதோடு, அவர்களுக்கான ஐ.சி.சி தரப்படுத்தல் புள்ளிகள் ஒவ்வொன்றும் கழிக்கப்பட்டுள்ளதாகரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐ.சி.சி தரப்படுத்தல் புள்ளி திட்டம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தெரிவிக்கின்றது.
போட்டியில் 19.2 ஆவது ஓவர் நிறைவில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போட்டியாளர்களை மைதானத்தை விட்டு வெளியில் வருமாறு சைகை காட்டிய குற்றத்திற்காகவே ஷகீப் அல் ஹசனிற்கு 1 மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அணித் தலைவரிற்கு விரல் நீட்டி பேசிய காரணத்திற்காக நூருல் ஹசனிற்கும் 1 மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த போட்டியாளர்கள் இருவரையும் ஐ.சி.சி அதிகாரிகள் சந்தித்த போது குற்றத்தை இருவரும் ஒத்துக்கொண்டு பின்னரே இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.