SuperTopAds

பாலியல் தொல்லை குறித்த முறைப்பாடு!! -சிறையில் இருந்து வெளியில் வந்த இளைஞர் பெண் மீது மூர்க்கத் தாக்குதல்-

ஆசிரியர் - Editor II

பாலியல் தொடல்லை தொடர்பில் முறைப்பாடு செய்த பெண் மீது குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் கோடாரியால் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டாவில், பாலியல் தொல்லை தொடர்பில் முறைப்பாடு செய்த பெண் மீது இளைஞர் ஒருவர் கோடாரியால் தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டாவைச் சேர்ந்த ராகுல் தோட் என்பவர் விமலா (வயது 28) என்ற பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி உள்ளார்.

இது குறித்து அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தின் முன் நிறுத்தியுள்ளனர். 

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் சில நாட்களில் அவருக்கான பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெளியே வந்த ராகுல், தன் மீது முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவர் மீது கோடாரியால் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டார்.

அவ்வீடியோவில் கடந்த திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில், குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் முன் நின்று இன்னுமொரு பெண்ணுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். 

இதன்போது அங்கு திடீரென வந்த  மர்ம நபர் வந்து அவரை கோடரியால் தாக்கத் தொடங்கியுள்ளார். வாசலில் இருந்து வீட்டிற்குள் ஓடிய அவரை பின் தொடர்ந்த மர்ம நபர் அந்த பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். 

அலரல் சத்தம் கேட்டு அயலில் உள்ளவர்கள் கூடியதால் தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிய வீடியோ கட்சிகள் சிசிரிவியில் பதவிகியுள்ளது. 

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பெண் ரங்கா ரெட்டியில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் தாக்குதல் நடத்திய ராகுல் மற்றும் தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.