அம்புலஸ்ன் வசதி இல்லை!! -வீதியோரம் இராணுவ வாகனத்தில் பெண் குழந்தை பெற்ற கர்ப்பிணி-

ஆசிரியர் - Editor II

காஸ்மீரில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் நோயாளர்காவு வண்டி இல்லாத சூழலில் இராணுவ வாகனத்தில் சென்ற கர்ப்பிணி அந்த வாகனத்திலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

அங்கு குப்வாரா மாவட்டத்தில் நரிகூட் பகுதியில் வாழ்ந்து வரும் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அந்த ஊரில் அம்புலன்ஸ் வசதி இல்லை.

இதனால், உடனிருந்த சுகாதார பணியாளர் ஒருவர் இந்திய இராணுவத்தின் கலரூஸ் கம்பெனி படை பிரிவுடன் தொடர்பு கொண்டுள்ளார். மனிதாவிமானத்துடன் செயற்பட்ட இராணுவத்தினர் வாகனம் ஒன்றை அனுப்பிவைத்தனர். அந்த வாகனத்தில் மருத்துவ குழு ஒன்றும் உடன் சென்றது.

வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது.

இதனால், அடர்பனி மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு இடையே சாலையோரம் வாகனம் நிறுத்தப்பட்டு அங்கிருந்த மருத்துவ குழு உதவியுடன் இராணுவ வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. 

அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு அசாதாரண சூழலில் பிறந்த அந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். பின் தாயும், குழந்தையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.